ஐயப்பன் வரலாறு

ஸ்ரீ ஐயப்பன் சரித்திரம்

ஸ்ரீயப் பதியாயும் லோகத்தைப் பரிபாலனம் செய்யும் ஸ்ரீமன் நாராயண மூர்;த்தி மோகினி அவதாரம் எடுத்து கைலாசபதியான ஸ்ரீ பரமேஸ்வரனைச் சந்தித்தார். அந்த அன்பின் உருவத்திலேயே ஜனித்தார் ஸ்ரீ ஹரிஹர புத்திரன். சங்கரனும் மோகினியும் பூலோகத்தைக் காவல் புரிவதற்காக காவல் மூர்த்தியாய் ஆசீர்வதித்து பிரம்மாவிடம்; ஒப்படைத்தார்கள். சகல சாஸ்த்திரங்களையும் வெகு சீக்கிரத்திலேயே பிரம்மாவிடம் கற்று மஹா சாஸ்த்ரு என்ற நாமத்தையும் அடைந்தார்.

புண்ணிய பூமியான சம்பூத்வீபத்திம் நேபாள தேசத்தைப் பளிஞன் என்ற அரசன் ஆண்டு வந்தான். மந்திர சாஸ்த்திரத்தில் பண்டிதனாகவும் காளியின் வரப்பிரசாதம் பெற்றவனாகவும் உள்ள அந்த அரசனுக்குப் புஷ்களை என்ற ஒரு மகள் இருந்தாள். அதே தேசத்தில் பரமசிவனிடத்தில் பக்தி கொண்ட கன்னிகா என்ற கன்னி ஸ்திரீயும் வசித்து வந்தாள். பளிஞன் சிரஞ்சீவியாய் இருப்பதற்கு காளியிடம் வரம் பெறுவதற்காக அநேககன்னி ஸ்திரீகளைக் காளிக்குப் பலியிட்டு வந்தான். பரமசிவனிடத்தில் பக்திகொண்ட கன்னிகாவையும் பலியிட நிச்சயித்தான். கருணாமூர்த்தியான சங்கரன் கன்னிகாவை ரட்ஷிக்கஇ குமாரனாக இருந்த சாஸ்த்தாவையும் தோழனான கருப்பண்ணனையும் கன்னிகாவிடம் அளித்து மறைந்தார். சாஸ்த்திரத்தில் வல்லவரான ஹரிஹரபுத்திரன் பளிஞனால் செய்யப்பட்ட பல சூழ்ச்சிகளையும் வென்று கன்னிகாவையும் காப்பாற்றி பளிஞனையும் ஆட்கொண்டார். பளிஞனது மகளான புஷ்களை பிரபுவின் கல்யாண குணங்களை அறிந்து காதலுற்றாள். லோகவீரரான சாஸ்த்தாவும் அவளை மணந்து புஷ்களாகாந்தன் என்ற நாமத்தையும் அடைந்தார்.

இப்பொழுது மலையாளம் (கொச்சிஇ கேரள ராஜ்ஜியம்) என்று அழைக்கப்பட்டு வரும் பிரதேசமானது அப்பொழுது பிஞ்சகன் என்ற அரசனால் ஆளப்பட்டது. அவன் கபாலியின் அனுக்கிரகத்தால் பூர்ணை என்ற மகளை அடைந்தான். வேட்டைக்குச் சென்ற அரசன் பூதங்களிடமும்இ வேதாளங்களிடமும் அகப்பட்டுத் தவிக்கும்பொழுது கபாலி சாஸ்தாவை அனுப்பவே அவர் வேதாளங்களையும்இ பூதகணங்களையும் தனக்கு அடிமை கொண்டு பிஞ்சகனைக் காத்தருளினார். தன்னை காப்பாற்றிய ஹரிஹரசுதனை மிகவும் பூஜித்து பூர்ணையையும் திருமணம் செய்து கொடுத்தார். பூர்ணையை மணந்து கொண்ட ஹரிஹராத்மஜன் iகாலசம் வந்தடைந்தார். கைலாசத்தில் பரமசிவன் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்குத் தலைவராகி பூதநாதன் என்ற பெயரையும் அடைந்தார். பூர்ணாஇ புஷ்களா சப்தனாக எழுந்தருளினார். இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு. அப்புத்திரனைச் செல்லப்பிள்ளை என்று அழைப்பார்கள். தன் மகளைத்தவிர பூர்ணையை விவாகம் செய்து கொண்டதால் கோபங்கொண்ட பளிஞன் நீ புலோகத்தில் ஜனித்து பிரம்மச்சாரியாயும்இ யோகியாயும் இருக்கக்கடவாய் என்று சபி;த்தான். சாபத்தை வரமாக ஏற்றுக் கொண்ட பூதநாதன் தான் பூலோகத்தில் அவதரிக்கும்பொழுது தன்னை வைத்துக் காப்பாற்றுவதற்காகப் பளிஞனையே பந்தள தேசத்து அரசனாகத் தோன்றும்படி அருளினார். பளிஞனும் பந்தள தேசத்தில் பிறந்து ராஜசேகரன் என்னும் பெயருடன் ஆண்டு வந்தான்.

தத்தாத்ரேயமூர்த்தியின் சாபத்தால் அவர் மனைவி மஹிஷியாகத் தோன்றி தேவர்களுக்குச் சத்ருவானாள். அவள் செய்து வந்த அக்கிரமங்களைப் பொறுக்காத தேவர்கள் பரமசிவனிடம் முறையிட்டார்கள். கைலாசவாசன் சாஸ்த்தாவை ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து அரசன் ரிஷிரூபத்தில் இருக்கும் சிவனையும் குழந்தையையும் கண்டு ரிஷியை வணங்கினார். ஹரனும் குழந்தையை எடுத்து அரசன் கையில் கொடுத்து இது தெய்வீக குழந்;தை மணிகண்டன் என்னும் நாமம் சூட்டி கவனத்துடன் வளர்த்து வா என்று அருளி மறைந்தார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.

மணிகண்டன் வந்த சில நாட்களில் ராணியும் ஓர் ஆண் மகவை ஈன்றாள். தக்க வயது வந்ததும் தன் மகனுக்கு அரசுரிமை இல்லாமல் மணிகண்டனுக்குக் கிடைத்து விடுமோ என்று மந்திரி செய்த சூழ்ச்சியால் பொய்யான தலைவலிக்கு புலிப்பால் வேண்டும் என்று வைத்தியன் மூலம் கேட்க வீரமணிகண்டனும் புலிப்பால் கொண்டு வருவதாக காட்டிற்குச் சென்றான். அங்கு இந்திரனின் வேண்டுகோளிற்கு இணங்கி மஹிஷியை சம்ஹரித்தான். இந்திரன் புலியாகவும்இ தேவர்களை புலிக்கூட்டமாகவும் கொண்டு புலி வாகனனாய் நாடு திரும்பினான்.

வழியில் உள்ள ஒரு மலையில் சாபத்தால் கிழரூபம் அடைந்த சபரி என்ற பித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள். கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும்இ அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நிவர்த்தி செய்து தேவலோகம் செல்லும்படி அருளினார். தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்துஇ பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள். மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும்இ ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.

மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து அரசனும் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்ட தான் இனி அங்கு தங்க முடியாது என்றும்இ சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார். புத்திர சோகத்தினால் வருந்தும் அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்து மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.

புஷ்களையும்இ சகலரின் சாபத்தை நிவர்த்தி செய்யும் சபரிமலையை அடைந்து தன் சாபமும் நிவர்த்தியாகி தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மலையிலேயே மாளிகைப்புரத்தம்மை என்ற பெயருடன் தவம் செய்து கொண்டிருக்கிறாள். தேவர்களின் சத்ருவாகி மஹிஷி ஐயனால் சம்ஹரிக்கப்பட்டு சாப நிவர்த்தியானவுடன் மஞ்சள் மாதா என்ற பெயருடன் ஐயனை அனுதினமும் தரிசிக்க அங்கு கோவில் கொண்டுள்ளாள்


Hit Counter provided by laptop reviews