பதினெட்டு படிகள்

பதினெட்டு சித்திகள்

1. அனிமா
2. லகிமா
3. மஹிமா
4. ஈநக்தவ
5. வசித்வ
6. ப்ராகாம்ய
7. புத்தி
8. இச்சா
9. ப்ராப்தி
10. ஸர்வகாம
11. சர்வ சம்பதப்ரத
12. சர்வ ப்ரியம்கா
13. சர்வ மங்களகாரண
14. சர்வ துக்கவிமோசன
15. சர்வம் ருத்யுப்ரசமன
16. சர்வ விக்ன நிவாரண
17. சர்வாங்சந்தர
18. சர்வ சௌபாக்ய தாயக
பதினெட்டுத் தத்துவங்கள்

மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்து இந்திரியங்களும், காமம், குரோதம், லோபம், மோகம், மத, மாத்சர்யங்கள், திதி, ஷைடம்பம் ஆகிய அசஷ்ட ராகங்களும் சத்வ இராஜஸ, தாமஸ குணங்களும் வித்யையும் அவித்யையும் சேர்த்து தத்துவங்கள் பதினெட்டாகும்.

தத்துவாதீதனாகப் பகவான் இருக்கிறான் என்று விளக்க இப்படிகளைக் கடந்து மேலே அவன் கோயில் கொண்டுள்ளான். எல்லா தத்துவங்களும் தன்னுள் அடக்கம் தான் அவற்றிற்குக் கட்டுப்படாதவன் என்பதை விளக்கவே பதினெட்டுப் படிகளுக்குமேல் இறைவன் கோயில் கொண்டிருக்கிறான்.

பதினெட்டுத் திருப்படிகள் அஷ்டாதச சித்திகளைக் குறிப்பிடுகின்றன. என்றும் ஒவ்வொரு வருடமும் மலைக்குச் சென்றவர்கள் பதினெட்டு சித்திகளும் கைகூடப்பெற்று பகவானிடம் ஐக்கியமாகிறார்கள். இந்த பதினெட்டு என்ற மங்களகரமான எண் ஜெயத்தை அளிப்பதாகும்.

பூலோகத்தில் அவதரித்த காலத்தில் குழந்தையாகக் குளத்துப் புழையிலும், பாலகனாக ஆரியங்காவிலும், அரசனாக அச்சங்கோயிலிலும், கிராத புருஷ மூர்த்தியாக எரிமேலியிலும், தவ வடிவமாக தர்மசாஸ்தாவாகச் சபரிமலையிலும் மாளிகை புறத்தம்மையின் பிரார்த்தனைக்கு இணங்கி காந்த மலையில் ஜோதீஸ்வரரூபனாகவும் தரிசனமளித்து மஹா சாஸ்தா என்று கொண்டாடப்பட்டுக் கைலாசத்தை அடைந்து பூர்ணா புஷ்களா சகிதனாகக் கைலாசத்தில் இருந்து வருகிறார். பய பக்தி ஆசாரத்துடன் அந்தக்கரண சுக்தியுடன் ஹரிஹரசுதனை வணங்குபவர்கள் சகல கஷ்டங்களையும் நாசம் செய்து சகல சேஷமங்களையும் கொடுத்து காத்து ரசஷித்து வரும் ஐயனின் அருளால் அனைத்தையும் அடையலாம்.

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பிரதிஷ்டைகள்

யோகிகள் ஸ்ரீ தர்த சாஸ்தாவை வழிபடும்போது தர்ம சாஸ்தாவின் பிரதிஷ்டைகளுக்கு யோக சாஸ்திர ரீதியில் விளக்கம் கூறியுள்ளார்கள். நெல்லை மாவட்டத்திலிருக்கும் செரிமுத்தைய்யனார் கோயில் மூலாதாரம், அச்சன்கோயில் சுவாதிஷ்டானம், ஆரியங்காவு மணிப்பூரகம், குளத்துப்புழா அநாஹதம், பந்தளம் விசுத்தி, சபரிமலை ஆக்ஞா என்று ஆறு இடங்களில் சாஸ்தாவை யோக சாஸ்திரத்தையொட்டி பிரதிஷ்டை செய்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். காந்தமலை ஜோதிதான் ஜோதி சொரூபமாக ஸஹஸ்ரதலம்.

ஸ்ரீ ஐயப்பன் ஸ்தல மகிமைகள்

தல புராணங்களில் ஐயப்பனின் கோயில்களை எந்தெந்த தினங்களில் தரிசிப்பது விசேஷம் என்பது கூறப்பட்டுள்ளது.

குளத்துப்புழை விஷ_க்கனி அன்றும், ஆரியங்காவு மண்டல பூஜை அன்றும், அச்சங்கோயில் மண்டல பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், சபரிமலை மகரஜோதிக்குத் தான் முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மகர சங்கராந்தி தினத்தன்றுதான் எம்பெருமான் ஒரே சமயத்தில் யோகியாகவும், ஜோதியாகவும் காட்சி தருகிறான்.

ஸ்ரீ தாரக பிரம்மத்தின் தவக்கோல விளக்கம்:

நித்திய பிரம்மச்சாரியாய் யோக பட்டயத்துடன் தேஜோமயமாய் ஸ்ரீ சக்கர பீடத்தில் மௌன பாஷையிலேயே பொருள் உணரச் செய்யும் சின்முத்திரையுடன் காட்சி தருகிறார். வலது கைகட்டை விரல் பரமாத்மாவையும், ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவையும் மற்றைய விரல்கள் ஆத்மாவை பந்தப்படுத்தும் உலக வாசனைகளையும் விளக்குகின்றன.

பந்த பாசங்கள் விலகிய ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிடும் நிலை சின் முத்திரை எனப்படும். இருகால்கள் குத்திட்டு இணைக்கும் யோக பட்டயம் சைவ வைணவ ஐக்கியத்தைக் காட்டுகிறது. பகவான் தனது மறுகையை தனது திரு பாதங்களை சூட்சுமமாக காட்டுவது சரணாகதியின் பொருளையுணர்த்துவதாகும்.

நீல வஸ்திரதாரியின் வஸ்திர விளக்கம்:

நீலம், கறுப்பு, காவி ஆகிய நிறங்களில் ஐயப்ப பக்தர்கள் உடையணிகிறார்கள்.

நீலம்: பகவானை நீலமேக ஸ்யாமள வர்ணன் என்று வர்ணிக்கிறோம். பகவான் நீல நிறத்தில் உடையணிந்திருக்கிறார். ஆகையால் தங்களைப் பகவானுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் நீல ஆடை அணிகிறார்கள்.

கறுப்பு:
சனீஸ்வரன் கரிய நிறம் உடையவர். சபரிகிரீசன் சனி தோஷத்தை நிவர்த்தித்து அருள் புரிபவர். எனவே சனி தோஷம் நீங்க சாஸ்தாவை துதிக்கும் முகமாக கறுப்பு உடை அணிகிறார்கள்.

காவி:
பற்றற்ற நிலையில் சன்னியாசிகளைப் போன்று சபரிமலை யாத்திரை மேற்கொள்ள காவி உடை அணிகிறார்கள்.


Hit Counter provided by laptop reviews