எமது சங்க செயற்பாடு

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பனின் மகிமை உணர்ந்தவர்கள் மாலையணிய விரும்பிய போதும் போதுமான தங்கு வசதிகள் விரதம் எப்படி கடைப்பிடிப்பது யாரைத் தொடர்பு கொள்வது போன்ற சிரமங்களை எதிர்நோக்குவதை நாம் பிரான்ஸ் நாட்டில் அறிய முடிந்தது. இவற்றை சரிசெய்யவும் விரதம் கடைப்பிடிக்கும் ஐயப்பசுவாமிகளை சபரிமலைக்கு அழைத்துச் சென்று வரவும் ஒரு சங்கம் தேவை என்பதை உணர்ந்து ஐயப்பனடியார்களை அழைத்து கலந்தாலோசித்து அகில இந்திய ஐயப்பா சேவா சங்கத் தலைமையின் அனுமதியுடன் பிரான்ஸில் அரசு அனுமதி பெற்று 2006 ஆம் ஆண்டு மண்டல விரத காலத்தில் ஐயப்பா சேவா சங்கம் பிரான்ஸ் என்ற நாமம் கொண்ட இச்சங்கம் உருப்பெற்றது.
இங்ஙனம்
செயலாளர்


Hit Counter provided by laptop reviews